உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடும்பத்தால் கைவிடப்பட்டவர் மீட்பு

குடும்பத்தால் கைவிடப்பட்டவர் மீட்பு

ஓசூர்:கெலமங்கலம் அருகே, குடும்பத்தால் கைவிடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர் மீட்கப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ரத்தினகிரி பஞ்., தடிக்கல் கிராமத்தில், 43 வயது மதிக்கத்தக்க ஆண், 7 மாதங்களுக்கு முன், குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு, போதிய உணவின்றி பாழடைந்த பழமையான கோவில் வளாகத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்திருப்பதாக, கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமாருக்கு, பொதுமக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையில், பஞ்., செயலர் பவுன்ராஜ் மற்றும் குழுவினர் அங்கு சென்று, அந்த நபரை மீட்டு, முடி வெட்டி, உடைகள் வாங்கி கொடுத்து, தடிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சையளித்து வருகின்றனர். அவரிடம் மருத்துவக்குழுவினர் விசாரித்தபோது, தடிக்கல் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பது தெரியவந்தது. அவரது உடலில் ஆங்காங்கு காயங்கள் உள்ளதால், சிகிச்சை முடிந்த பின், சமூக நலத்துறை வசம் மூலம், உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை