உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அதியமான் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் திறனறித்தேர்வில் மாநில சாதனை

அதியமான் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் திறனறித்தேர்வில் மாநில சாதனை

ஊத்தங்கரை, தமிழக அரசு நடத்திய மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, கடந்த மாதம், 11ம் தேதியன்று நடந்தது. இதில், ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதில், மாணவன் ரவிவர்மன், 100க்கு, 99 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். நிஷா, சுவாதி ஆகியோர், 100க்கு, 98 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றனர். மேலும், 33 மாணவ, மாணவியர், 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் திருமால்முருகன், செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் கணபதிராமன், பள்ளியின் முதல்வர் கலைமணிசரவணகுமார், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை