உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொல்லியல் ஓர் அறிமுகம் கருத்தரங்கம்

தொல்லியல் ஓர் அறிமுகம் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், வரலாற்று துறை தொல்லியல் மன்றம் சார்பில், 'மாவட்ட தொல்லியல் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில், கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வரலாற்று துறை தலைவர் (பொ) கனகலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், வரலாற்று குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் பேசினர். கவுரவ விரிவுரையாளர் ஜென்சியா நன்றி கூறினார்.கருத்தரங்கில், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ், மாவட்டத்தில் அண்மையில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள், அவற்றின் கால அளவு பற்றியும், கருப்பு சிவப்பு பானையோடுகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் புகழ்பெற்ற மல்லசந்திரம் கல் திட்டைகள், குந்தாணி மலைப்பகுதியில் உள்ள கல்திட்டைகள், பெருங்கற்கால குத்துகற்கள் பற்றி எடுத்துரைத்தார். கலந்துரையாடலில், வரலாற்றில் சிறப்பு தலைப்புகளுக்கு துறை சார்ந்தவர்களை கொண்டு வகுப்புகள் நடத்த வேண்டும். கூட்டு கருத்தரங்கு, பயிற்சி பட்டறை, வரலாற்று துறை ஆசிரியர்களுடன் இணைந்து மாநாடு அல்லது பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்வது. மாணவர்களை வரலாற்று துறையில் கள ஆய்வுக்கு அழைத்து செல்வது. அகழ்வாய்வு தளங்களை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைப்பது. மாவட்டம் சார்ந்த புத்தகங்களை வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை