/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட் டம், தளி பி.டி.ஓ., அலுவலகத்தில், தமிழ்-நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தளி ஒன்றிய மாநாடு நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் சிக்கமரி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயலாளர் மதிய-ழகன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் முருகம்மாள், மாவட்ட செயலாளர் வெண்ணிலா உட்பட பலர் பேசினர்.மாநாட்டில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 6,750 ரூபாயை தமி-ழக அரசு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே பண பலன்களை வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது. முன்னாள் ஒன்றிய தலைவர் ராமன் நன்றி கூறினார்.