உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகனம் மோதி விபத்து ராணுவ வீரர் பலி

வாகனம் மோதி விபத்து ராணுவ வீரர் பலி

கிருஷ்ணகிரி:கந்திக்குப்பம் அடுத்த பாளேப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 42, ராணுவ வீரர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை முடிந்து கடந்த மார்ச், 29ல், தான் பணிபுரியம் அசாமுக்கு ரயிலில் செல்ல, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு பைக்கில் சென்றுள்ளார்.ராஜேந்திரனின் உறவினர் முருகன் என்பவர் பைக்கை ஓட்டியுள்ளார். பர்கூர் பொறியியல் கல்லுாரி அருகே சென்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பெங்களூரு ராணுவ மருத்துமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரன் இறந்தார்.கந்திக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ