உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, கோவை, சட்டக்கல்லுாரி மாணவியை கடந்த, 2ம் தேதி இரவு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த பா.ஜ., மகளிரணி சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி சிலம்பொலி, மேற்கு மாவட்ட மகளிரணி தலைவி முத்துலட்சுமி ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.இதில், தேசிய பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சிவகாமி பரமசிவம் பேசியதாவது: கோவை சட்டக்கல்லுாரி மாணவி, பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், பெண்கள் விடுதி குளியறையில் ரகசிய கேமரா வைத்து, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின், 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், பெண்களின் அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழக அரசின் மெத்தன போக்கால் பெண்ணினமே சீரழிகிறது. பாலியல் சீண்டல்களை தடுக்க வேண்டும். பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர் விமலா வரவேற்றார். கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் சரண்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ