| ADDED : நவ 23, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் திரும்ப பெறும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒரு பகுதியாக வீடு, வீடாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், வாக்காளர்களுக்கு, 93.39 சதவீத கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்விற்கு சென்றுவிட்டு திரும்பிய கலெக்டர் தினேஷ்குமார், பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி அருகே கார் மற்றும் டூவீலர் மோதிக் கொண்ட விபத்தில், காயமடைந்த சின்னகாரகுப்பத்தை சேர்ந்த ராமச்சந்திரனை மீட்டு, குடிநீர் வழங்கி ஆறுதல் கூறினார். தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.