உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பட்டகப்பட்டியில் கன்று விடும் திருவிழா

பட்டகப்பட்டியில் கன்று விடும் திருவிழா

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, காட்டகரம் பஞ்.,க்கு உட்பட்ட, பட்டகப்பட்டி கிராமத்தில், நேற்று கன்று விடும் திருவிழா நடந்தது. இதில் குறிப்பிட்ட துாரத்தை, குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுக்கு, பரிசுகள் வழங்குவதாக அறிவிக்கப்-பட்டிருந்தது. இதில் முதல் பரிசு 50,001 ரூபாயும், 2ம் பரிசு, 40,001 ரூபாயும், 3ம் பரிசு, 30,001 ரூபாய் என, 100 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவிற்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்துார், தர்மபுரி மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து, 350க்கும் மேற்பட்ட கன்றுகளை, விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இவ்விழாவை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். போச்சம்பள்ளி இன்ஸ்-பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை