மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி விபத்து கட்டட தொழிலாளி பலி
26-Oct-2025
ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே நெருப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ், 40, விவசாயி; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும், பாதை தகராறு தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த, 27ம் தேதி ஏற்பட்ட தகராறில், தேவராஜின் தாய் சக்காரலம்மா, 70, என்பவரை ஒரு தரப்பினர் மரக்கட்டடையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தேவராஜ் புகார் படி, நெருப்புக்குட்டையை சேர்ந்த பெரிய வெங்கட்ராமன், 70, ராஜேந்திரன், 50, அவரது மனைவி மஞ்சுளா, 45, இவர்களது மகன் வெங்கடேஷ், 25, ஆகிய, 4 பேர் மீது, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், தன் மனைவியை மஞ்சுளாவை தாக்கியதாக ராஜேந்திரன் கொடுத்த புகார் படி, சக்காரலம்மா, தேவராஜ், அவரது மனைவி நாகம்மா, 35, மற்றும் சின்னப்பன், 75, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அரசு டவுன் பஸ் மோதிகட்டட மேஸ்திரி பலிபோச்சம்பள்ளி, அக். 30 கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுழி, பட்டனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 25, கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, தன் ஊரிலிருந்து போச்சம்பள்ளி அருகே உள்ள, பாளேதோட்டம் கிராமத்திலுள்ள தன் அக்கா வீட்டிற்கு பஜாஜ் பல்சர் பைக்கில், வெப்பாலம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த அரசு டவுன் பஸ் மோதி, விஜய் பலத்த காயமடைந்தார்.அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Oct-2025