உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.96 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி

ரூ.96 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சியில், 15 வார்டுகளில், 96 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி பழையபேட்டை பிள்ளையார் கோயில் தெரு, தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய 2 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கவுன்சிலர்கள், பாலாஜி, ஜெயக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ