உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வர் தர்மபுரி வருகை கி.கிரியில் ஆய்வுக்கூட்டம்

முதல்வர் தர்மபுரி வருகை கி.கிரியில் ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும், 11ல் தர்மபுரி வருகிறார். அதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி வருகை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு, அமைச்சர் சக்கரபாணி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகள், புதிய திட்டப்பணிகள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா. மாநகராட்சி கமிஷனர் சினேகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி