உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்கூட்டர் மீது லாரி மோதி கல்லுாரி மாணவி பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி கல்லுாரி மாணவி பலி

கிருஷ்ணகிரி: காவேரிபட்டணம் அருகே, ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில், கல்லுாரி மாணவி உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையை சேர்ந்தவர் சபரீசன், 43. இவரது மகள் தனுஸ்ரீ, 17, கேரள மாநிலம் பாலக்கோட்டில் உள்ள கல்லுா-ரியில், முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். கடந்த, 24ல், சபரீசன், தனுஸ்ரீ இருவரும் ஹீரோ டூயட் ஸ்கூட்டரில் சென்றனர். ஸ்கூட்டரை சப-ரீசன் ஓட்டினார். மாலை, 6:45 மணியளவில் சப்-பானிப்பட்டி அருகே, தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த ஈச்சர் லாரி மோதியதில் தனுஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயங்களுடன் சப-ரீசன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது புகார்படி, காவேரிபட்டணம் போலீசார், லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், கரகூரை சேர்ந்த டிரைவர் ராமசாமி, 52, மீது வழக்கு பதிந்து விசாாி்க்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி