உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காரில் கடத்த முயன்ற மது வகைகள் பறிமுதல்

காரில் கடத்த முயன்ற மது வகைகள் பறிமுதல்

ஓசூர்: ஓசூர், ஹட்கோ எஸ்.ஐ., மாதப்பன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அப்போது சானமாவு வனப்பகுதியை ஒட்டியவாறு, கர்நாடக பதிவெண் கொண்ட மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., கார் நின்றது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, காரின் டயர் வெடித்திருந்தது தெரிந்தது.காரை சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கர்நாடக மதுவகைகள் இருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு, 3.68 லட்சம் ரூபாய். காரை பறிமுதல் செய்த போலீசார், புகையிலை பொருட்கள், கர்நாடக மதுவகைகளை கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை