உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி பெற்றோர் பலி மகளுக்கு பி.டி.ஓ., ஆபீசில் பணி

மின்சாரம் தாக்கி பெற்றோர் பலி மகளுக்கு பி.டி.ஓ., ஆபீசில் பணி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளியை சேர்ந்த நாராயணா, 46. கட்டட தொழிலாளி; இவரது மனைவி ரேணுகா, 42. கடந்த, 20ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, வீட்டு மாடியில் ரேணுகாவிற்கு மின்சாரம் தாக்கியது.சத்தம் கேட்டு மாடிக்கு சென்ற நாராயணா, மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் கணவன், மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால் அவரது மகள் ஹர்சிதா, 19, மற்றும் மகன் சீனிவாசன், 17, ஆகியோர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால், கருணை அடிப்படையில் ஹர்சிதாவிற்கு, தளி பி.டி.ஓ., அலுவலகத்தில், கணினி இயக்குபவர் பணி வழங்கப்பட்டு, அதற்கான ஆணையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர், ஹர்சிதாவிற்கு நேற்று வழங்கினர். பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை