| ADDED : மார் 15, 2024 02:38 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி,
கே.ஆர்.பி., அணைக்கு, மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக,
நீர்வரத்து வேகமாக குறைந்து வந்தது. கடந்த, 8ல் அணைக்கு நீர்வரத்து,
32 கன அடியாக குறைந்த நிலையில், 9ல், இந்த ஆண்டில் முதல் முறையாக அணைக்கு
நீர்வரத்து முற்றிலும் நின்றது. கடந்த, 3 நாட்களுக்கு பிறகு, 12ல்
அணைக்கு நீர்வரத்து, 107 கன அடியாக இருந்தது. பின்னர், 13ல், 54 கன
அடியாகவும், நேற்று, 38 கன அடியாகவும் படிப்படியாக மீண்டும்
நீர்வரத்து சரிந்து வருகிறது. அணையிலிருந்து இடது மற்றும் வலது புற
வாய்க்கால் மூலம், 192 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம்
மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 46.35 அடியாக இருந்தது.
மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவுவதால், அணை நீர்மட்டம் மேலும் சரிந்து
வருகிறது.