உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இறுதிநாளில் குவிந்தது வேட்புமனு நகராட்சி வளாகத்தில் நெரிசல்

இறுதிநாளில் குவிந்தது வேட்புமனு நகராட்சி வளாகத்தில் நெரிசல்

ஓசூர்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய நேற்று இறுதி நாள் என்பதால், ஓசூர் நகராட்சியில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வது தீவிரமடைந்தது. நகராட்சி வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், அரசியல் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓசூர் நகராட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., வில் பாலகிருஷ்ணரெட்டி, தி.மு.க., வில் மாதேஸ்வரன், தே.மு.தி.க., வில் சந்திரன், பா.ம.க., வில் ஜெயபிரகாஷ், காங்கிரசில் தியாகராஜ், பாரதிய ஜனதாவில் டாக்டர் வரதராஜன் ஆகியோர் சேர்மன் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். கடந்த 22ம் தேதி மனு தாக்கல் துவங்கியது. அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணரெட்டி 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று கடைசி நாள் என்பதால், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட ஏராளமானோர் ஆதாரவாளர்களுடன் குவிந்தனர். தி.மு.க., வேட்பாளர் மாதேஸ்வரன், நிர்வாகிகளுடன் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் விமலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், எம்.பி., சுகவனம், நகர செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் சின்னபிள்ளப்பா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் அக்ரோ நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் குருசாமி, கவுன்சிலர் எல்லோராமணி, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தே.மு.தி.க., வேட்பாளர் சந்திரன், நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட துணைச்செயலாளர் கணேசன், நகர செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மணி, ஒன்றிய செயலாளர் ராமசாமிரெட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பா.ம.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ், மாநில துணைத்தலைவர் தேவராஜ், காங்கிரஸ் கவுன்சிலர் இந்திராணி, சுயேச்சை கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் வரதராஜன், காங்கிரஸ் வேட்பாளர் தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவி, பகுஜன் சமாஜ் வேட்பாளர் இளவசரன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். 45வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும், நகராட்சி தலைவர் பதவிக்கும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். இதனால், போலீஸார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனால், வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்