கெரிகேப்பள்ளி அரசு பள்ளியில் சரக அளவிலான தடகள போட்டி
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கெரிகேப்பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளியில், மத்துார் சரக அளவிலான தடகள போட்டி நேற்று முன்தினம் முதல், தொடர்ந்து நடந்து வருகிறது. முதல் நாளில் மாணவர்களுக்கும், நேற்று மாணவியருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். தடகள போட்டியில், 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டபந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், தட்டு எரிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன. மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.