உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

நல்லம்பள்ளி;நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில், தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜ் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை