மேலும் செய்திகள்
மத்திய அமைச்சர் கொடும்பாவி எரிப்பு
11-Mar-2025
கிருஷ்ணகிரி: லோக்சபாவில், தமிழக, எம்.பி.,க்களை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி, ஐந்துரோடு ரவுண்டானாவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர்கள் மேற்கு அஸ்லம், கிழக்கு வேலுமணி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷம் எழுப்பினர்.* ஊத்தங்கரை ரவுண்டானாவில், நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அமானுல்லா, நகர செயலாளர் தீபக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.* ஓசூர் மாநகர, தி.மு.க. சார்பில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் படத்தை எரித்தனர். ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
11-Mar-2025