கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நாளை, மாவட்ட, தி.மு.க., இளைஞரணி அவசர கூட்டம் நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க. இளைஞரணி சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை, 9:30 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடக்கிறதுகூட்டத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆகியோர், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, துணை முதல்வர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.