உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு

ஓசூர், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் ஓசூர் மாநகராட்சியின் சி.எம்.எம்.ஏ., அமைப்பு சார்பில் சுத்தம், சுகாதாரம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தினேஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில், தன்னார்வலர் தொண்டு நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஓசூர் மாநகராட்சி சி.எம்.சி.ஏ., துணை மேலாளர் டேவிட் பாக்கியசுந்தரம், திட்டஅலுவலர் மாதப்பன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பவானி, பால்டேனியல் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை