உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வனத்தில் இறந்து கிடந்த யானை, காட்டெருமை

வனத்தில் இறந்து கிடந்த யானை, காட்டெருமை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி காப்புக்காட்டிலுள்ள கல் ஏரி சரக பகுதியில், வனச்சரகர் முருகேசன் மற்றும் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதன் சடலத்தை காட்டுப்பன்றிகள் கடித்து குதறியிருந்தன. யானையின் உடலில் தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. கால்நடை மருத்துவக் குழுவினர், யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். இதில், ஆண் யானையின் தந்தம் குத்தியதால் மண்ணீரல் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்து, பெண் யானை உயிரிழந்தது தெரியவந்தது. இனப்பெருக்கத்தின் போது ஏற்பட்ட சண்டையில், ஆண் யானை, தன் தந்தத்தால் பெண் யானையை குத்தியிருக்கலாம் என, வனத்துறையினர் கூறுகின்றனர்.தேன்கனிக்கோட்டை வனச்சரகம், அய்யூர் வனத்திலுள்ள சாமை ஏரியில், காட்டெருமை இறந்து கிடந்தது. வனத்துறையினர் அதை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். தண்ணீர் குடிக்க வந்தபோது, ஏரி கரையிலுள்ள சேற்றில் சிக்கிய காட்டெருமை, வெளியே செல்ல முடியாமல் தண்ணீருக்குள் சென்று மூழ்கி உயிரிழந்தது, வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ