உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளியை கொன்ற யானை: கர்நாடகா வனத்துக்கு விரட்டல்

தொழிலாளியை கொன்ற யானை: கர்நாடகா வனத்துக்கு விரட்டல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகருக்குள் கடந்த, 1ம் தேதி அதிகாலை ஒரு ஆண் யானை புகுந்தது. ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய யானை, இரவில், கோட்டங்கிரி கிராமத்தை சேர்ந்த ராமண்ணா, 60, என்பவரை தாக்கி கொன்றது. இதையடுத்து ராமன்தொட்டி அருகே, சிகரலப்பள்ளி கேட் வனப்பகுதியில் முகாமிட்டதால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஓசூர் வனத்துறையினர் கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு, விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ