உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகளை தடுக்க இரும்பு வேலி; அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

யானைகளை தடுக்க இரும்பு வேலி; அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

ஓசூர்: விவசாய நிலங்களில் யானைகள் வராமல் தடுக்க, இரும்பு வேலி அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புசங்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி விடுத்துள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தம்மா-புரம் விவசாயி மூர்த்தி என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை, யானைகள் நாசம் செய்துள்ளன. ஜீரோ பாயிண்ட் தம்மாபுரம் முதல் தேவரட்டா முத்-தியால் மடுவு எல்லை வரை, இரும்பு ரோப் வேலி அமைக்க வேண்டும். கூடுதல் வாகனங்கள் மற்றும் யானை விரட்டும் பாதுகாவலர்கள் அதி-கமாக நியமிக்கப்பட வேண்டும். விளைநிலங்க-ளுக்குள் யானை வராமல் தடுக்க, வனத்துறை-யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி