மேலும் செய்திகள்
அரசு நிலத்தின் மண் கடத்தல் வருவாய் துறையினர் கப்சிப்
2 hour(s) ago
வெவ்வேறு விபத்தில் இருவர் பலி
27-Dec-2025
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து கடும் சரிவு
27-Dec-2025
கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
27-Dec-2025
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஜிங்கல் கதிரம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 50; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 2023 செப்., 1ல் இவரது வாட்ஸாப் எண்ணிற்கு 'மெசேஜ்' வந்தது.அதில், 'இது ஒரு 'பார்ட் டைம் ஜாப், கம்பிளிட் டாஸ்க். நாங்கள் அனுப்பும் லிங்க்குகளை கிளிக் செய்தால் ஊதியம் கிடைக்கும்' என கூறினர். இதை நம்பிய அவருக்கு சிறிது பணமும் கிடைத்தது.இதைத் தொடர்ந்து, 'நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு லாபத்துடன் முதலீட்டு தொகையும் கிடைக்கும். விரைவில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்' என மேலும் ஒரு மெசேஜ் வந்தது.அதை நம்பிய கோவிந்தராஜ், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 26.52 லட்ச ரூபாயை அனுப்பினார். அதன்பின் யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அவர்களது இணையதள பக்கங்கள் முடங்கின.இதுகுறித்து, நேற்று முன்தினம் கோவிந்தராஜ் அளித்த புகாரின்படி, கிருஷ்ணகிரி 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.
2 hour(s) ago
27-Dec-2025
27-Dec-2025
27-Dec-2025