உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ரூ.66.84 லட்சம் பொருள் திருட்டு

 அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ரூ.66.84 லட்சம் பொருள் திருட்டு

ஓசூர்: ஓசூர், அசோக் லேலண்ட் யூனிட் 1ல், 66.84 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'பியூயல் இன்ஜெக்டர்'கள் திருடு போயின. தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அசோக் லேலண்ட் யூனிட் 1 இயங்குகிறது. இங்கு, ஓசூர் சுபாஷ் நகரை சேர்ந்த விக்ரம், 23, இரு ஆண்டுகளாக லாரி டிரைவராகவும், தேன்கனிக்கோட்டை தாலுகா, கொப்பக்கரை அடுத்தபில்லாரி அக்ரஹாரத்தை சேர்ந்த சென்ராயன், 25, மூன்றாண்டுகளாக ஸ்டோர் கீப்பராகவும் பணியாற்றினர். செப்., 4ல் நிறுவனத்தில் நடந்த வழக்கமான சோதனையின் போது, விக்ரம், சென்ராயன் ஆகியோர், லாரி இன்ஜினில் பொருத்தப்படும், 36 பியூயல் இன்ஜெக்டரை திருடியது தெரிந்தது. தொடர் விசாரணையில் இவர்கள், 66.84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொத்தம், 1,188 பியூயல் இன்ஜெக்டர்களை பல்வேறு நாட்களாக திருடி வந்ததும் தெரிந்தது. புகாரில், விக்ரம், சென்ராயன் மற்றும் சிலர் மீது நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்