மேலும் செய்திகள்
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 40 யானைகளை விரட்டும் பணி
6 minutes ago
நலம் காக்கும் ஸ்டாலின் ஓசூரில் நாளை முகாம்
7 minutes ago
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
04-Dec-2025
பாப்பிரெட்டிப்பட்டி: தமிழக அளவில், 7 மண்டலங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கிடையே நடந்த கைப்பந்து விளை-யாட்டு போட்டிகள், தர்மபுரியில் நடந்தது. இதில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார் அரசு உயர் நிலைப் பள்ளியில் பயிலும், மாண-வியர் ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்-றனர். இதே போன்று, தர்மபுரி மாவட்ட அளவில் நடந்த இலக்கிய மன்ற போட்டியில், மாணவன் யோகேஸ்வரன், மாணவி தாமரைசெல்வி ஆகியோர், ஆங்கில பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இம் மாணவ, மாணவிய-ரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரி-யர்கள் குமரன், கோட்டி, ஆங்கில ஆசிரியர் சீனி-வாசன் ஆகியோரையும், தலைமை ஆசிரியர் அசோக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா மற்றும் ஆசிரியர்கள், பி.டி.ஏ., உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்-தனர்.
6 minutes ago
7 minutes ago
04-Dec-2025