உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரியில் சாரல் மழை

கிருஷ்ணகிரி: வங்க கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தி-ருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் மழை பெய்-யாமல், வானம் இருண்டு காணப்பட்ட நிலையில், நேற்று அதிகா-லையில் இருந்து அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. ஏற்கனவே பனிப்பொழிவு காணப்படும் நிலையில், சாரல் மழையால் மிகவும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் நேற்றும் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ