உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் செலவினம் புகார் பதிவேடுகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

தேர்தல் செலவினம் புகார் பதிவேடுகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி:தேர்தல் செலவினம் குறித்த புகார் பதிவேடுகளை முறையாக பராமரிக்க, தேர்தல் பொது பார்வையாளர் அறிவுறுத்தினார்.லோக்சபா தேர்தலையொட்டி, மாவட்ட கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் கிரண்குமாரி பாசி தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.இதற்கு செலவின பார்வையாளர் சுதன்ஷூசேகர் கவுதம், போசலே சந்திப் தின்கர், தேர்தல் நடத்தும் அலுவலர் சரயு முன்னிலை வகித்தனர். பொது பார்வையாளர் கிரண்குமாரி பாசி பேசியதாவது:கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதியின் குழுவினர், தேர்தல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். சட்டமன்ற தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உதவி செலவின மேற்பார்வையாளர்கள் வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க வேண்டும். மேலும், தேர்தல் செலவினம் குறித்த புகார் பதிவேடுகளை முறையாக பராமரித்து, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, முறையாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை