உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி மாவட்ட கூட்டுறவுத்துறையில் காலி பணியிடங்களுக்கு நேர்காணல்

கி.கிரி மாவட்ட கூட்டுறவுத்துறையில் காலி பணியிடங்களுக்கு நேர்காணல்

கிருஷ்ணகிரி, கூட்டுறவுத்துறை சார்பில், தமிழகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள, 2,581 பணியிடங்களுக்கு கடந்த அக்.,11ல் தேர்வு நடந்தது. இதை, 56,800 பேர் எழுதினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, மத்திய கூட்டுறவு வங்கிகளில், 17 உதவியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள, 60 பணியிடம் உள்பட, 77 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.மாவட்டம் முழுவதும், 920 பேர் கலந்து கொண்ட நிலையில், 180 பேர் தேர்ச்சி பெற்றனர்.கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியில் நேற்று, 4 கட்டங்களாக நடந்த நேர்காணலில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தேர்ச்சி பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதன் முடிவில், நேர் காணலில் பெற்ற மதிப்பெண் களோடு, தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து, சராசரி மதிப்பிட்டு முதல் இடம் பிடித்த, 77 பேரை தேர்வு செய்வர். அதன் பின்னர் அவர்களுக்காண பணியிட ஒதுக்கீடு அறிவிக்கப்படும். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடராஜன், துணை பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) சிவகுருநாதன் ஆகியோர் நேர்காணல் பணிகளை மேற்பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை