உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரூர் பி.டி.ஓ., சஸ்பெண்ட்

அரூர் பி.டி.ஓ., சஸ்பெண்ட்

அரூர்:அரூர் பி.டி.ஓ., (வ.ஊ.,) தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அரூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பாபிசெட்டிப்பட்டி மற்றும் பையர்நாயக்கன்பட்டி ஆகிய இரு கிராமங்களிலும் சீரான முறையில் குடிநீர் வழங்க வில்லை என கூறி சமீபத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து உடனடியாக விசாரிக்க அரூர் பி.டி.ஓ., (வ.ஊ.,) மாலா சம்பவ இடத்துக்கு செல்லவில்லை. ஆர்.டி.ஓ., சுப்புலட்சுமி, டி.எஸ்.பி., சம்பத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களை அமைதிப்படுத்தினர்.மேலும் பையர்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து மோட்டூரில் குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் கடந்த இரு மாதமாக பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பி.டி.ஓ.,வின் அலட்சியம் குறித்து அறிந்த கலெக்டர் லில்லி, பி.டி.ஓ., மாலாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ