உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் நல பணியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு

மக்கள் நல பணியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி:சூளகிரி மற்றும் தளி பஞ்சாயத்து யூனியன்களில் காலியாக உள்ள மக்கள் நலப்பணியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஞ்சாயத்து யூனியன் அத்திமுகம் பஞ்சாயத்து மற்றும் தளி ஊராட்சி ஒன்றியம் குப்பட்டி பஞசாயத்து ஆகியவற்றில் மக்கள் நலப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்தை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.இதற்காக விண்ணப்பிப்போர் 18 வயது முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படித்திருக்க வேண்டும். மலைப்பிரதேசம் மற்றும் பழங்குடியினர் பகுதியினராக இருப்பின் எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானதாகும்.விண்ணப்பதாரர் அதே பஞ்சாயத்தை சேர்ந்தவராகவும், அங்கு வசிப்பவராகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக மாதம் 5,000 ரூபாய் மறறும் அகவிலைப்படி வழங்கப்படும்.தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஓ.,விடம் வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ