உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

அடிப்படை எழுத்தறிவு திட்ட தேர்வுஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 18 வயதை கடந்த எழுத, படிக்க தெரியாத பெண்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம், அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று காலை நடத்தப்பட்டது. இதில், 15 பெண்கள் தேர்வு எழுதினர். முன்னதாக, இந்த கல்வியாண்டிற்கான தேர்வை எதிர்கொள்ளும் வகையில், 15 பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி மஞ்சுளா ஆகியோர் செய்திருந்தனர். தன்னார்வலர் திவ்யா தேர்வை நடத்தினார்.புகையிலை பொருட்கள்விற்ற 3 பேர் சிக்கினர்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் போலீசார், நேற்று முன்தினம் ஆவின் மேம்பாலம் அருகிலுள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 5 கிலோ இருந்தது தெரிய வந்தது-. அதை வைத்திருந்ததாக கனகமுட்லுவை சேர்ந்த மகேந்திரன், 57 என்பவரை கைது செய்தனர். சென்னை சாலையில் கடை ஒன்றில் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2 கிலோ இருந்தது தெரிந்தது.- அதை வைத்திருந்ததாக, சேலம் சாலையை சேர்ந்த பாஷா, 55 என்பவரை கைது செய்தனர்.அதேபோல ராயக்கோட்டை லிங்கனம்பட்டியில் ராயக்கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற சின்னராஜ், 45 என்பவரை கைது செய்தனர்.இருவேறு சாலை விபத்தில்வாலிபர் உட்பட 2 பேர் பலிகிருஷ்ணகிரி-வேப்பனஹள்ளி அடுத்த கே.கொத்துார் இருளர் காலனியை சேர்ந்தவர் ராமப்பா, 65, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 15 இரவு நாச்சிகுப்பம் அருகே வேப்பனஹள்ளி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பிக்கப் வேன் மோதியதில் பலியானார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.* கிருஷ்ணகிரி அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் கிரண், 22; சூளகிரியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 16ல், யமஹா பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். காலை, 6:00 மணியளவில், மேலுமலை அருகே கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பைக், லாரியின் பின்புறம் மோதியதில்- படுகாயமடைந்த கிரண் உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.நில பிரச்னையில் முன்விரோதம்பெண்ணை தாக்கியவருக்கு காப்புகிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த குண்டியால்நத்தத்தை சேர்ந்தவர் சுமதி, 47; அதே பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால், 40; உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்த நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், சுமதியை, ராஜகோபால் தாக்கினார். சுமதி புகார்படி, பர்கூர் போலீசார் ராஜகோபாலை கைது செய்தனர்.நகை திருட முயன்றவர் கைதுகிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், அடுத்த நரிமேட்டை சேர்ந்தவர் பவுன்ராஜ், 47, ஆட்டோ டிரைவர்; இவர் நேற்று முன்தினம், தன் குடும்பத்தினருடன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர், பீரோவில் இருந்த, 3 பவுன் நகையை திருட முயன்றுள்ளார். இதை கவனித்த பவுன்ராஜ், அந்த நபரை பிடித்து, காவேரிப்பட்டணம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், காவேரிப்பட்டணம் அடுத்த பெல்ராம்பட்டியை சேர்ந்த முத்துகுமார், 26, என தெரிந்தது-. அவரை போலீசார் கைது செய்தனர்.கடையில் நகை திருடியமூன்று பெண்கள் கைதுஓசூர்: ஓசூரில், தனியார் ஜூவல்லரி கடை இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் மதியம், நகை வாங்குவது போல் நடித்து சென்ற மூன்று பெண்கள், 21,000 ரூபாய் மதிப்புள்ள, 3 கிராம் தங்கத்தை திருடி கொண்டு தப்ப முயன்றனர். இதை கவனித்த ஜூவல்லரி கடை ஊழியர்கள், மூன்று பெண்களையும் பிடித்து, சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம், ஓஜிகுப்பத்தை சேர்ந்த அலமேலு, சண்முகம் மனைவி லலிதா, 38, மற்றும் சேலம் மாவட்டம், வெள்ளக்கல் பகுதியை சேர்ந்த ராஜாராம் மனைவி கவுரி, 45, என தெரிந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர்.சுவார்டு தொண்டு நிறுவனத்தில் உலக மகளிர் தின விழாகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுவார்டு தொண்டு நிறுவன அலுவலகத்தில், உலக மகளிர் தின விழா நேற்று நடந்தது. தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் இயக்குனர் ஜலாலுதீன் வரவேற்றார். முன்னாள் திட்ட அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை கணேசன் பேசினார். நவஜீவன் டிரஸ்ட் மற்றும் சுவார்டு தொண்டு நிறுவனம் இணைந்து, சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் - 2003 சட்டத்தின் விதிமீறல்கள் குறித்து, நடந்த சர்வேயில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. துணைத்தலைவர் ராமசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை