உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு

ஓசூர்: ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ.,வும், ஓசூர் மாநகராட்சி, மின்வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டியும் தலைமை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது:கடந்த, 3 ஆண்டுகால, தி.மு.க., ஆட்சி செயலிந்த அரசாக உள்ளது. சட்டம் ஒழுங்கு முடங்கி சீர்கெட்டுள்ளது. தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகள் வீட்டில், பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தி, வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதியவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் கண்டனத்திற்கு பிறகு, அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.ஓசூரில் கடந்த இரு மாதங்களில், சட்டவிரோத வருமானத்திற்காக, 20க்கும் மேற்பட்ட ஆதாய கொலைகள் நடந்துள்ளன. மாவட்ட முழுவதும் பரவியுள்ள கஞ்சாவால் இளம் குற்றவாளிகள் உருவாகி உள்ளனர். பட்டி, தொட்டியெங்கும் இயற்கைக்கு மாறான பொருட்களான சாராயம், கஞ்சா அதிகரித்து விட்டது. இந்த சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு, தமிழக ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளுமே காரணம்.இவ்வாறு, அவர் பேசினார்.ஆர்ப்பாட்டங்களில், தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஓசூர் பகுதி செயலாளர் ராஜூ, கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்