உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுார் அம்மன் நகரில், மகா ராஜகணபதி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் வளா-கத்தில், கற்பக விநாயகர், பாலமுருகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்கா, நவக்கிரகம் மற்றும் நாகதேவதை சன்னதி உள்-ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 21ம் தேதி துவங்-கியது. அன்று காலை, 10:00 மணிக்கு, ஐ.டி.ஐ., அருகே உள்ள மாரியம்மன் கோவிலிலிருந்து, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஆகிய-வற்றை, மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.தொடர்ந்து, கங்கா பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்-வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, கோபுரத்திற்கு தானியம் நிரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு, கோபுர கல-சத்திற்கு புனிதநீர் ஊற்றி, மகா ராஜகணபதி மற்றும் பரிவார தெய்-வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள் விஸ்வநாதன், தமிழரசன், நாகராஜ், மணி உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ