உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது

தி.மு.க., நிர்வாகியை கத்தியால் குத்தியவர் கைது

ஊத்தங்கரை,ஊத்தங்கரை அடுத்த, தாண்டியப்பனுாரை சேர்ந்தவர் தவமணி, 55. இவர் ஊத்தங்கரை, தி.மு.க., மீனவர் அணி நகர அமைப்பாளராகவும் உள்ளார். இவர் மனைவி சுமித்ரா ஊத்தங்கரை டவுன் பஞ்., 1வது வார்டு கவுன்சிலர். ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட தாண்டியப்பனுாரில் ஜெயக்கொடி என்பவரின் வீட்டின் முன், சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்தக்காரர் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம், 38, மற்றும் முருகேசன், 40, ஆகியோர், தங்களது வீட்டிற்கு குடிநீர் பைப் வசதி ஏற்படுத்தி தந்து விட்டு, ரோடு போடுமாறு தகராறு செய்துள்ளனர். அங்கு சென்ற தவமணியை, அருணாச்சலம் சிறிய கத்தியால் அவரது கழுத்து, வயிற்று பகுதியில் கிழித்துள்ளார். படுகாயமடைந்த தவமணி புகார் படி, ஊத்தங்கரை போலீசார், அருணாச்சலம் மற்றும் முருகேசன் மீது வழக்குப்பதிந்து, அருணாச்சலத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை