உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கனவு இல்ல திட்டம் பயனாளிகளுக்கு ஆணை

கனவு இல்ல திட்டம் பயனாளிகளுக்கு ஆணை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெக்கேரி பஞ்.,ல், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், 17 பயனாளிகளுக்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்ட பணி ஆணை வழங்கும் விழா சின்னட்டி கிராமத்தில் நேற்று நடந்தது. பஞ்., தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன் முன்னிலை வகித்தார். தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 17 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணி ஆணைகளை வழங்கினார். கெலமங்கலம் பி.டி.ஓ.,க்கள் சதீஷ், சாந்தி, இணை பி.டி.ஓ., பத்மா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி