மேலும் செய்திகள்
மாநில கைப்பந்து போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவியர்
7 minutes ago
நலம் காக்கும் ஸ்டாலின் ஓசூரில் நாளை முகாம்
7 minutes ago
குடும்ப தகராறில் பெண் தற்கொலை
04-Dec-2025
ஓசூர்: ஓசூர் வனப்பகுதியில் முகாமிட்ட, 40 யானை-களை, தேன்கனிக்கோட்டையின் அடர்ந்த வனப்-பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா பகுதியிலி-ருந்து வெளியேறிய, 100க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டா, ராயக்கோட்டை, ஓசூர் வனச்சரகங்களில் குழுக்-களாக பிரிந்து அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன.ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் புகுந்த, 40 யானைகள், இரவில் வனத்தை விட்டு வெளி-யேறி, பயிர்களை நாசம் செய்தன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்-டனர். அதன்படி, சானமாவு வனப்பகுதியில் இருந்த யானைகளை கெலமங்கலம், உத்தனப்பள்ளி சாலை மற்றும் ஜக்கேரி, ராயக்கோட்டை சாலையை கடக்க வைத்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி, வனத்துறையினர் விரட்-டினர். மேலும் அவற்றை அடர்ந்த வனப்பகு-திக்குள் விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இக்கூட்டத்திலிருந்து பிரிந்து, நொகனுார் வனத்தில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை, வனத்துறையினர் கண்கா-ணித்து வருகின்றனர்.
7 minutes ago
7 minutes ago
04-Dec-2025