உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் ஒற்றை யானை வாகன ஓட்டிகள் அச்சம்

ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே, சாலையில் உலா வந்த யானையால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிகமாக உள்ளன. இவை அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, குந்துக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உலா வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கிராம மக்கள் சத்தம் போட்டனர். ஆக்ரோஷமடைந்த யானை, மக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்ட துவங்கியது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், சாலையில் உலா வந்த ஒற்றை யானை, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின் அவ்வழியாக வாகன போக்குவரத்து துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்