உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

பொதுமக்களுக்கு இடையூறுரவுடி உட்பட இருவர் கைதுஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார் உழவர் சந்தை அருகேயும், ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.ஐ., சபரிவேலன் மற்றும் போலீசார், அலசநத்தம் சாலையிலும் தனித்தனியாக ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, வேலுார் மாவட்டம், திருமலை குப்பம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேஷ், 38, ஓசூர் அருகே திம்மசந்திரத்தை சேர்ந்த டிரைவர் மதன்குமார், 26, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.இதில் மதன்குமார் மீது ஹட்கோ போலீசில் தலா ஒரு கொலை மற்றும் கொலை மிரட்டல் வழக்கும், மத்திகிரி போலீசில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.லாட்டரி விற்ற இருவர் கைதுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடக்கிறதா என நேற்று முன்தினம் அந்தந்த பகுதி போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஊத்தங்கரையில் லாட்டரி விற்ற ஷெரீப், 35 மற்றும் தேன்கனிக்கோட்டை நியமதுல்லா, 63 ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 250 ரூபாயை பறிமுதல் செய்தனர்.தேசிய திறனறி தேர்வுமாணவர்கள் ஆர்வம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று நடந்த தேசிய திறனறி தேர்வில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதை ஊக்குவிக்கவும், உதவித்தொகை வழங்கும் வகையிலும், மத்திய கல்வி அமைச்சகம், தேசிய வருவாய் வழி திறனறிவு (என்.எம்.எம்.எஸ்) தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.நடப்பாண்டிற்கான தேர்வு, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தின், 14 தேர்வு மையங்கள், ஓசூர் கல்வி மாவட்டத்தின், 12 தேர்வு மையங்கள் என, 26 மையங்களில் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 4,365 பேருக்கு நடந்த தேர்வில், 4,278 பேர் தேர்வெழுதினர், 87 பேர் தேர்வெழுதவில்லை.அதேபோல, ஓசூர் கல்வி மாவட்டத்தில், 3,334 பேருக்கு நடந்த தேர்வில், 3,242 பேர் தேர்வெழுதினர், 92 பேர் தேர்வெழுதவில்லை. தேர்வெழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெற்றோருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.மனநலம் குன்றிய சிறுமி மாயம்போச்சம்பள்ளி தாலுகா, குள்ளம்பட்டி அடுத்த கே.புதுாரை சேர்ந்த மனநலம் பாதித்த, 13 வயது சிறுமி, கடந்த, 2ல் மாயமானார். சிறுமியின் பெற்றோர் புகார் படி, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.தேய்பிறை அஷ்டமி நாளில்காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகிருஷ்ணகிரி அடுத்த, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம் உள்ளிட்டவையும், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனையும் நடந்தன. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையிலுள்ள தக்சண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பராமரிப்பு இல்லாத விவசாய நிலத்தில் தீகிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, அத்திகானுாரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50; இவர், அதே பகுதியிலுள்ள தன், 3 ஏக்கர் விவசாய நிலத்தை பராமரிக்காமல் உள்ளார். அதில் முட்புதர்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடாக காட்சியளித்தது. இந்நிலையில் நேற்று அந்த வழியாக சென்ற சிலர், புகைபிடித்து சிகரெட்டை வீசி சென்றுள்ளனர். இதனால், முட்புதர்கள் மற்றும் செடி, கொடிகள் தீப்பற்றி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்து விட்டு எரிந்தது. அருகிலுள்ள ராமசாமி என்பவரின் மாந்தோப்பிற்கு தீ பரவியது. சுதாரித்த ராமசாமி மற்றும் அவர் மகன் கமலேசன் ஆகியோர், தங்களின் விவசாய நிலத்திலுள்ள மின்மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைக்க முயற்றனர். தகவலின்படி அங்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.சந்திரசூடேஸ்வரர் கோவிலில் குவிந்துள்ள குப்பையால்முகம் சுழிக்கும் பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். வெளிநாட்டினரும் வருகின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் வளாகத்தில், பார்க்கிங் பகுதி உட்பட பல்வேறு இடங்களில், குப்பை ஆங்காங்கு குவிந்து, சுகாதார சீர்கேடாக உள்ளது.மேலும், கோவிலில் உள்ள பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலை, சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு மனமில்லை. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. கோவில் வளாகத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சர்வதேச ஈர நிலங்கள் தினம்விழிப்புணர்வு பேரணிதிருப்பத்துார் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, சிங்காரப்பேட்டை வனச்சரகம் சார்பில், ஊத்தங்கரையை அடுத்த, சிங்காரப்பேட்டையில், சர்வதேச ஈர நிலங்கள் தினம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், ஈரநிலங்களின் அழிவை தடுத்தல், நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டையிலுள்ள ஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, வாகை அறக்கட்டளை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி, மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிங்காரப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் ஈர நிலங்களே இல்லை என்றால், நமக்கு மழையால் கிடைக்கும் நன்மைகள் இல்லாமல் போகும். அதனால் ஏரி, குளங்களை துார்வார வேண்டும். மழை நீரை சேகரிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலர் ரமேஷ், வனவர் பரந்தாமன், வனக்காப்பாளர்கள் அர்ஜூன், சக்தி, உதயகுமார், அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.தி.மு.க., பூத் கமிட்டிஆலோசனை கூட்டம்தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, கடத்துார் கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் மற்றும் கடத்துார் பேரூராட்சி, தி.மு.க., பொறுப்பாளர்கள், பூத் ஏஜன்ட் ஆலோசனை கூட்டம் கடத்துாரில் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நெப்போலியன், பேரூராட்சி தலைவர் மணி, நகர செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் முனிராஜ் வரவேற்றார். கூட்டத்தில், தி.மு.க., பொறுப்பாளர்கள், பூத் ஏஜன்ட்டுகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசப்பட்டது. இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சென்னகிருஷ்ணன், மனோகரன், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இளம்பெண் மாயம்தர்மபுரி அடுத்த மட்டையாம்பட்டியை சேர்ந்த கவிப்பிரியா, 21; இவர், ஐ.டி.ஐ., முடித்துவிட்டு, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பெற்றோர் கவிப்பிரியாவிற்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். கடந்த, 25ம் தேதியன்று முதல் கவிப்பிரியாவை காணவில்லை. பெற்றோர் புகார்படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.மரவள்ளி நடவு பணி தீவிரம்வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் என்பதால், மானாவாரியாகவும், இறவைப்பாசனம் மற்றும் சொட்டுநீர் பாசனம் மூலம், பெரும்பாலான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்தாண்டு, தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததை கருத்தில் கொண்டு, அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, அச்சல்வாடி, கோபிநாதம்பட்டி, வடுகப்பட்டி, வேட்ரப்பட்டி, மாம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 10 முதல், 12 மாதத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடைக்கு தயாராகி விடும். நடப்பாண்டு, மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, 11,000 ரூபாய் வரை விற்பனையானதால், மரவள்ளி சாகுபடியில், ஆர்வம் காட்டுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.சம்பங்கி பூ விலை சரிவுதர்மபுரி மாவட்டத்தில் அரளி பூ, சம்பங்கி பூ, 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் பூக்கள் உள்ளூரில் விற்பனை செய்தும், சென்னை, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூ, 15, ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை கூலி கூட இல்லாத நிலையில், பூவை பயிர் செய்த விவசாயிகள், மிகவும் கவலை அடைந்து வருகின்றனர்.விவசாய தொழிலாளர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்அரூர் கச்சேரிமேட்டில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் முத்து, மாநில குழு உறுப்பினர் லெனின் உள்பட, பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.அதியமான்கோட்டையில்அண்ணாதுரை நினைவு தினம்அதியமான்கோட்டையில், அண்ணாதுரை நினைவுநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு, தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 55ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமையில், தி.மு.க.,வினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர் ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி மோகன், மகேஷ்குமார், ஒன்றிய பொருளாளர் சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சின்னப்பெருமாள், மாவட்ட பொறியாளர்கள் துணை அமைப்பாளர் சரவணகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இளவயது திருமணம்வாலிபர் மீது போக்சோதர்மபுரி மாவட்டம், மொரப்பூரை சேர்ந்த, 17 வயது பிளஸ் 1 மாணவி பள்ளி விடுமுறையில் திருப்பூர் சென்றுள்ளார். அங்கு, தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது உடன் டிரைவராக பணியாற்றிய கோவிந்தராஜ், 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, ஏப்., 26ல் பெரியப்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மாணவியை திருமணம் செய்து கொண்ட கோவிந்தராஜ், அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.இந்நிலையில் கர்ப்பமடைந்த மாணவி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ