உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

சீதா திருக்கல்யாண வைபவம்கிருஷ்ணகிரி, போலீஸ் குடியிருப்பில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோவிலில், நேற்று, 12ம் ஆண்டு சீதா திருக்கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. இங்கு பஜனை முறைப்படி, சீதா திருக்கல்யாண மஹோத்ஸவமும், ஆஞ்சநேயர் மஹோத்ஸவமும், நங்கவரம் பிரம்மஸ்ரீ மணிகண்டேஸ்வரர் பாகவதர் தலைமையில், விட்டல் நாம பிரசார பவன் மண்டலியினரால் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சீதா கல்யாண மஹோத்ஸவக் கமிட்டியினர் செய்திருந்தனர்.ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்தேவாதி அம்மன் திருவிழாஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளியிலுள்ள தேவாதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்பர். இவர்கள் பெரும்பாலும் ஜவுளித்தொழிலை பிரதானமாக கொண்டுள்ளனர். தொழில் சிறக்க ஆண்டுதோறும் ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேவாதி அம்மன் கரகம் எடுத்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில், 10 க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். இதில், குப்புசாமி, சங்கோதி, ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.கல்லுாரி மாணவி மாயம்கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 19. தனியார் கல்லுாரியில் பி.ஏ. முதலாமாண்டு படிக்கிறார். இவர் கடந்த, 2ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிப்பார்த்த பெற்றோர், இது குறித்து சாமல்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், கல்குமாரம்பட்டியை சேர்ந்த லோகநாதன், 24, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணமான பெண்ணுடன்கல்லுாரி மாணவர் ஓட்டம்ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ், 21; சென்னை அருகே, தனியார் கல்லுாரியில் பி.இ., 4ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் ஊத்தங்கரை வந்த இவர், கடந்த, 8ல் ஊத்தங்கரையில் இருந்து கல்லுாரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் கல்லுாரி செல்லவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்த பின்னர், ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். அதில், ஊத்தங்கரை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான, 24 வயது பெண்ணுடன், தன் மகன் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.வக்கீல் வீட்டில்நகை, 'டிவி' திருட்டுகல்லாவி அருகே, கொரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார், 42, வக்கீல்; கடந்த, 1ல் இவர் வீட்டை பூட்டி விட்டு, சென்னையிலுள்ள மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். கடந்த, 2ல் மாலை இவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை அவரது சகோதரர் பத்மநாபன் பார்த்துள்ளார். வீட்டினுள் பீரோவில் இருந்த, 3 பவுன் நகை, ஒரு எல்.இ.டி. 'டிவி' மற்றும் பொருட்கள் திருடப்பட்டிருந்தன. பத்மநாபன் தன் சகோதரர் நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் புகார் படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.வாகன உதிரிபாக கடையில் தீரூ.25 லட்சம் மதிப்புக்கு நாசம்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பஸ்தி இந்திரா நகரை சேர்ந்தவர் பிரம்மையா, 39; பாகலுாரை அடுத்த தின்னப்பள்ளியில், பொக்லைன் இயந்திர வாகனங்களுக்கான உதிரிபாகம் மற்றும் ஆயில் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த, 2ம் தேதி இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. ஓசூர் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டதாக தெரிகிறது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.இருவேறு இடத்தில் விபத்து: அரசு ஊழியர் உட்பட 2 பேர் சாவுகாவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டையைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன், 49. இவர் வேப்பனஹள்ளி பி.டி.ஓ., அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 2 இரவு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் மோதி படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராஜாராம் நிசாந்த், 40. இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கல்லாவி ஓலப்பட்டியில் உள்ள தன் சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த, 2 இரவு அவர் ஓலப்பட்டி - புலியூர் சாலையில், ஓலப்பட்டி தனியார் பள்ளி அருகில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற கார் மோதி படுகாயமடைந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மீது கார் மோதல்த.வா.க., நிர்வாகி பலிதமிழக வாழ்வுரிமை கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலா ளராக இருந்தவர் சபரி, 40; இவர், தன் ஆதரவாளர்கள் அசோக் குமார், 27, மற்றொரு அசோக்குமார், 33, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு சென் னையிலிருந்து ஓசூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். நள்ளிரவு, 1:00 மணியளவில், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேலுமலை வனப்பகுதி அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில், சபரி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடம் சென்று, சபரியின் உடலை மீட்டனர். தொடர்ந்து, படுகாயமடைந்த, இருவ‍ரையும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையை அடுத்த துடுவனஅள்ளியில் வைக்கப்பட்ட சபரியின் உடலுக்கு, த.வா.க., தலைவர் வேல்முருகன் அஞ்சலி செலுத்தினார்.இளம்பெண் தற்கொலைஉறவினர்கள் சாலை மறியல்ஊத்தங்கரை அடுத்த, உப் பாரப்பட்டியை சேர்ந்தவர் வேடி யப்பன், 32, விவசாயி. இவர் மனைவி சுமதி, 22. இருவருக்கும் கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன் திரு மணமானது. கனகவேல், 2, என்ற குழந்தை உள்ளது. நேற்று மாலை சுமதி அவருடைய விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர். புகார்படி, ஊத்தங்கரை போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள்,‍ வேடியப்பன் மீது சந்தேகம் உள்ளதாக கூறி, அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார், அவர்களை சமரசம் செய்து, சுமதியின் கணவர் வேடியப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர். சுமதி உடல்நல குறைவால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.கழிவுநீர் கால்வாய் அமைக்க பூஜைதர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் பஞ்.,ல் மாதேமங்கலம் காலனி உள்ளது. இங்கு, 15- வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வெட்டுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கவுன்சிலர் மாதுசண்முகம் தலைமை வகித்து கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், பஞ்., தலைவர் சங்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.டீசல் திருடிய இருவருக்கு காப்புதேன்கனிக்கோட்டை கித்துவாய் தெருவை சேர்ந்தவர் வாகித், 53; தேன்கனிக்கோட்டை, ஓசூர் சாலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கடந்த மாதம், 20 இரவு, பங்கிலிருந்த, 4,500 ரூபாய் மற்றும் 100 லி., டீசல் திருடு போனது. பங்கில் பணியாற்றிய பென்சுப்பள்ளி மனோஜ், 19, கம்மந்துார் சிவக்குமார், 19 ஆகியோர் திடீரென வேலையிலிருந்து நின்றனர். சந்தேகமடைந்த வாகித் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், மனோஜ், சிவக்குமாரை பிடித்து விசாரித்தனர். இதில், பெட்ரோல் பங்கில் இருந்து, 20 லிட்டர் கேன்களில், 100 லிட்டர் டீசலை, பிக்கப் வாகனத்தில் திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 4,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை