உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் மற்றும் எதிரில் என இரண்டு இடங்களில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச் செயலரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, இரண்டு தண்ணீர் பந்தலையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்மோர், லெமன் ஜூஸ் போன்றவற்றை வழங்கினார். அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ், அவைத் தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் சைலேஸ் கிருஷ்ணன், ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தென்னரசு, நகர செயலர் கேசவன், அம்மா பேரவை மாவட்ட செயலர் தங்கமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. கவுன்சிலர்கள் குபேரன், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் ராமு முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்து, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கினார். முன்னாள் மாநகர செயலர் நாராயணன், ஒன்றிய செயலர் ரவிக்குமார், கவுன்சிலர் லட்சுமி ஹேமகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி