| ADDED : ஜூன் 08, 2024 02:39 AM
பெருந்துறை: பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர், நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்றனர். பள்ளி மாணவன் அனிருத், 720க்கு 685 மதிப்பெண் பெற்று முதலிடம், தினேஷ், 652 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஸ்ரீசாந்த், 595 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடம், யஷ்வந்த், 572 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பெற்றனர்.இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: இப்பள்ளி மாணவ, மாணவியர் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறுகின்றனர். பள்ளியில் தலைசிறந்த பாட வல்லுனர்களால் தினசரி நீட் மற்றும் ஜெஇஇ பயிற்சி வகுப்பு நடக்கிறது.கலைப்பிரிவு மாணவர்களுக்கு சி.ஏ., பவுண்டேஷன் மற்றும் டேலி சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய, மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறோம்.இவ்வாறு கூறினர்.நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை, பள்ளி தலைவர் யசோதரன், தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் குமாரசாமி, இணை செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகக் குழுவினர் பாராட்டினர்.