உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை எம்.எல்.ஏ., ஆபீசில் ரூ.21 லட்சம் திட்ட பணிக்கு பூஜை

ஊத்தங்கரை எம்.எல்.ஏ., ஆபீசில் ரூ.21 லட்சம் திட்ட பணிக்கு பூஜை

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2023 - 24- ம் ஆண்டிற்கான, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ.சேவை மையம், கணினியரை மற்றும் காத்திருப்போர் அறை கட்டிடம் கட்டும் பணிக்கு, 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், தொகுதி செயலாளர் திருஞானம் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ