| ADDED : ஜன 07, 2024 10:45 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியர்கள் சார்ந்த, குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடக்கவுள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில், முதல் தளத்திலுள்ள கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும், 18ல் காலை, 11:00 மணியளவில் கோட்ட அளவிலான அஞ்சல் ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் ஓய்வூதியர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை, 'Pension Adalat' என தபால் உறை மீது எழுதி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி 635 001 என்ற விலாசத்திற்கு அனுப்பலாம். அனுப்பும் புகார்களில், ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழு விபரங்களை குறிப்பிட்டு எழுத வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.