| ADDED : ஜூலை 11, 2024 12:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பூசிநாயக்கனுார் கிரா-மத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. காங்., - எம்.பி., கோபிநாத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்-படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை பெறுவது குறித்து, சம்-பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.நிகழ்ச்சியில், 148 பயனாளிகளுக்கு, 36.16 லட்சம் ரூபாய் மதிப்பி-லான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சரயு வழங்கி பேசு-கையில், ''இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என முதல்வர் தெரி-வித்துள்ளார். நம் மாவட்டத்தில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்படும் மனுக்களை, இணையத்தில் பதிவேற்றம் செய்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார். முன்னதாக வேளாண் துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்-கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி, உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்-டனர்.