கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், காங்., கட்சி சார்பில், ராகுல் எம்.பி.,யின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நகர துணைத்தலைவர்கள் ரகமத்துல்லா, லலித் ஆண்டனி ஆகியோர் தலைமை வகித்தனர்.கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத், 500 ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், ஓசூர் எம்.ஜி., ரோட்டிலுள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், ராகுல் பெயரில் சிறப்பு பூஜை நடந்ததது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பால், பிரட் போன்றவை வழங்கப்பட்டன. * ஊத்தங்கரை ரவுண்டானாவில், அகில இந்திய, காங்., கமிட்டி உறுப்பினர் குமரேசன் தலைமையில், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு, பிரட், பிஸ்கட் வழங்கப்பட்டது.