கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர ஸ்வாமி ம்ருத்திகா பிருந்தாவன கோவிலில், ராம ஜெனன மஹோத்ஸவ விழா இன்று, 16ல் துவங்குகிறது. நாளை காலை, கணேச ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் கலசஸ்தாபனத்துடன் ராம நவமி உற்சவம் ஆரம்பமாகிறது. 17 முதல், 19 வரை பாலாஜி சர்மாவின் சொற்பொழிவும், 20 மற்றும், 21ல் சென்னை லஷ்மிபதிராஜாவின் சொற்பொழிவும், 21 காலை, ஆனந்த தீர்த்த பஜனா மண்டலியினரால் உஞ்சவிருத்தியும், 22 மாலை, தீர்த்த பஜனா மண்டலியினரின் பஜனும் நடக்கிறது. 23 காலை, 10:00 மணிக்கு, சத்யநாராயண ஸ்வாமி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, சீதா திருக்கல்யாணமும் நடக்கிறது. 24 மாலை, ஸ்ரீஹரிபட் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரியும், 26 மாலை, 7:00 மணிக்கு, 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையும், 27 காலை, 9:30 மணிக்கு, சுயம்வரா பார்வதி பரமேஸ்வரஹோமமும், 11:00 மணிக்கு, ராமர் பட்டாபிஷேகம், மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி நகர்வலம் ஆகியவை நடக்கிறது. 28ல் கிருஷ்ண மூர்த்தி பாகவதர் குழுவிரின் பஜன் சயன உற்சவம், 29ல் வசந்த உற்சவம், 30ல் ஆஞ்சநேய உற்சவம், மே, 1ல் ராகவேந்திரர் உற்சவமும், சஹஸ்வர காயத்ரி ஜபம், லட்சார்ச்சனை, பிரகலாத ராமர் உற்சவமும் நடக்கிறது.