மேலும் செய்திகள்
கே.ஆர்.பி., அணையில் 2000 கன அடி நீர் திறப்பு
16-Oct-2024
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில், 2,835 கன அடி நீர் திறப்பால், 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, நேற்று முன்தினம், 3,428 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 2,587 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.10 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று முன்தினம் அணையிலிருந்து, 2,680 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அணையிலிருந்து, 2,835 கன அடி நீர், 3 சிறிய மதகுகள் மூலம் திறக்கப்பட்டது. ஆற்றில் சீறிப்பாய்ந்து ஓடும் தண்ணீர், தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், பூங்காவிற்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதித்த தடை தொடர்கிறது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் வரை, 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில், தென்பெண்ணை ஆற்றை கடக்வோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றிக்கு செல்ல வேண்டாம் என, பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று காலை, கிருஷ்ணகிரியில் வெயில் இருந்த நிலையில், அவ்வப்போது வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நேற்று மாலை வரை, 2 நாட்களாக மழை பெய்யவில்லை.
16-Oct-2024