ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்
காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகம் அருகில், சேலம் மெயின் ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில், சாலையோர வியாபாரிகள் பழக்கடைகள், காய்கறி கடைகள் வைத்துள்ளனர்.இதனால், அவ்வப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதாக, நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள், சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற பலமுறை கூறியும் அகற்றவில்லை.நேற்று, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அன்புஎழில், உதவி பொறியாளர் அன்பரசு, சாலை ஆய்வாளர்கள் வெங்கடேசன், ஆறுமுகம், முத்துசாமி, சாமுண்டி மற்றும் சாலை பணியாளர்கள் உடனிருந்தனர்.